நாமக்கல் ஒன்றியத்தில் திமுக இளைஞா் அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

நாமக்கல் ஒன்றியத்தில் திமுக இளைஞா் அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆலோசனையின் பேரில், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் வழிகாட்டுதலின் படி, நாமக்கல் ஒன்றிய கழக செயலாளர் வி.கே.பழனிவேல் தலைமையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் ந.நலங்கிள்ளி முன்னிலையில், நாமக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பிரபாகரன் ஏற்பாட்டில் நாமக்கல் ஒன்றியத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 நபர்களுக்கு பால், பண் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து நாமக்கல் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 200 நபர்களுக்கு பால், பண், இனிப்பு மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி புனிதமரி ஆர்.சி. துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், இரப்பர், பென்சில் துருவி, ஸ்கேல், இனிப்புகள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டோ வழங்கப்பட்டது. சிலுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், இரப்பர், பென்சில் துருவி, ஸ்கேல், இனிப்புகள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டோ வழங்கப்பட்டது. மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் கழக இருவண்ண கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, நாமக்கல் ஒன்றிய பொருளாளர் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர்ராஜ், பாலசுப்ரமணி, வினோத் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story