முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

X
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருச்செங்கோடு நகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தேர் நிலை அருகில் நடைபெற்றது. நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர பொருளாளர் பெருமாள் வரவேற்றார். முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பரமானந்தம், மாநில வலைதள அணி பொறுப்பாளர் ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில் கலந்து கொண்டார். தலைமைக் கழகப் பேச்சாளர் மாநில செய்தி தொடர்பு துணை செயலாளர் பொள்ளாச்சி சித்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரில் வரும் பாத்திரங்களை இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டு பேசி பொதுமக்களை கவர்ந்தார். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். 40பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியை பறித்து தலைவர் காலடியில் சமர்ப்பிக்க கடும் உழைப்பை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில்எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் திருச்செங்கோடு ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜபாண்டி ராஜவேல், நகர் மன்ற உறுப்பினர்கள் கலையரசி, புவனேஸ்வரி, ரமேஷ்,புவனேஸ்வரி, உலகநாதன் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
