தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முதலமைச்சர் உத்தரவு

தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முதலமைச்சர் உத்தரவு

முதல்வர்

கோடைகாலத்தில் குடிநீர் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது அளவு கடந்த வெயில் ஆனது தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் குடிநீர் வழங்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம், அதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளலாம் மேலும் சென்னையில் உள்ள நீர் நிலைகளில் நீர் கொள்ளளவு எவ்வளவு உள்ளது என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story