ராசிபுரம் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம்
ராசிபுரம் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராசிபுரம் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக பொதுமக்கள் அளிக்கலாம் அதற்கு ஓரிரு நாட்களில் உடனே தீர்வு காணப்படும் என ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் ஆர் கவிதா சங்கர், தெரிவித்துள்ளார். முகாம் நடைபெறும் இடம் ஸ்ரீ கிருஷ்ண மஹால், (பழைய பிரகாஷ் திருமண மண்டபம்), எல்லப்பா தெரு-2, இராசிபுரம் பகுதியில் காலை 10.மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அதற்க்காக வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்த வார்டு பகுதியில் நேரில் சென்று துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் ஒரே இடத்தில் இந்த முகாமில் கலந்து கொள்வதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு நகர மன்ற தலைவர் முனைவர் ஆர் கவிதா சங்கர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்விற்கு நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், வார்டு செயலாளர்கள் ஏடிசி சக்திவேல், கண்ணன் பாபு, மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.
Next Story