மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தளவாபாளையத்தில் 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்' நடைபெற்றது.

தளவாபாளையத்தில் "மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை" பார்வையிட்ட பேரூராட்சி தலைவர். தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் "மக்களுடன் முதல்வர் திட்டம்" முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கோவையில் துவக்கி வைத்தார். அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை, விரைந்து செயல்படுத்திட திட்டமிட்டு, நிர்வாகத்தில் வெளிப்பட தன்மையை ஏற்படுத்தி, பொதுமக்களை சென்று சேரும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில், உரிய தீர்வை பொதுமக்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில், எரிசக்தி துறை,மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளிட்ட துறைகளின் சார்பில், கரூர் மாவட்டம் , புஞ்சை தோட்ட குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட தளவாபாளையத்தில் மலையம்மன் திருமண மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். இந்த முகாமை, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா பார்வையிட்டார். துணைத் தலைவர் சதீஷ்,வி.ஏ.ஓ. ருக்குமணி கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.

Tags

Next Story