மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி துவக்கம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 1 வது வார்டு முதல் 7 ஆவது வார்டு வரை வார்டுகளின் பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் மனு வாங்கும் நிகழ்ச்சி துவக்கபட்டது, நிகழ்ச்சியினை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயன்,திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, நகராட்சி ஆணையாளர் சேகர், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டவர்கள் துவக்கி வைத்தனர், ஒன்னாவது வார்டு வார்டு முதல் ஏழாவது வார்டு வரை உள்ள பொதுமக்களின் குறைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டது, பெறப்பட்ட மனுக்கள் முப்பது நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்தார்.