மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள்: தேதி அறிவிப்பு
பொதுமக்கள் அனைவரும் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களின் பயன்களை எளிதில் உடனடியாக பெறும் வகையில் அவர்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே முகாம்கள் அமைத்து கோரிக்கைகளை பெற்று தீர்வு காண தமிழக அரசால் “மக்களுடன் முதல்வர்” முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட இருப்பதாகவும்,
விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகள் ஆகியவற்றில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. “மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய்த்துறை, மின்சார துறை, நகராட்சி நிர்வாகத் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 28.12.2023 வரை முகாம்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட தேதி மற்றும் இடங்களில் நடைபெற உள்ளது. முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.