விழுப்புரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - எம்.எல்.ஏ. ஆய்வு

விழுப்புரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - எம்.எல்.ஏ. ஆய்வு

 முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 

விழுப்புரம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் நகராட் சிக்குட்பட்ட வார்டு எண் 11, 23, 24, 25, 27 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை பதிவு செய்தனர். இம்முகாமை விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதியோர், கணவனால் கைவிடப்பட்ட வர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தொடர்பான கோரிக்கை மனுக்களும், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங் கள், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கோரிக்கை மனுக் களும், காவல்துறை சார்பில் பொருளாதார குற்றங்கள், நில அபக ரிப்பு மோசடி, வரதட்சணை உள்ளிட்ட இதர புகார்கள் மற்றும் சுய தொழில் வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி பதிவு செய்துகொள்ளலாம். இம்மனுக்கள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். எனவே இந்த வாய்ப்பை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் ரமேஷ், கோட்டாட்சியர் காஜா ஷாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் மதன்குமார், நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புல்லட்மணி, இம்ரான்கான், ரியாஸ்அகமது, கோமதி பாஸ்கர், தி.மு.க. வார்டு செயலாளர்கள் பூந்தோட்டம் சண்முகம், சுமோமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நன்னாடு முத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story