மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருவெண்ணெய்நல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. 

திருவெண்ணெய்நல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகை யில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள மங்களாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் ராஜ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) முரளி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, தி.மு.க. நகர செயலாளர் பூக் கடை கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா ஷாகுல்ஹமீது கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் குத்துவிளக்கு ஏற்றினார். முகா மில் மின்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் 514 பேரி டம் மனுக்களை பெற்று, அதன் விவரங்களை கணிணியில் பதி வேற்றம் செய்தனர். மேலும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனு மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story