முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: மாவட்ட ஆட்சியர் தகவல்
மாவட்ட ஆட்சியர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2024ஆம் ஆண்டிற்கு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு” 15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்க 31.05.2024 மாலை 4.00 மணிவரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தகவல் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது ரூ.1,00,000ஃ- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2024-ஆம் ஆண்டிற்;கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. விருதுக்கான குறிக்கோள் : அ. இளைய சமுதாயத்தினரின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குதல். ஆ. இளைஞர்களை (15 முதல் 35 வயது வரை) சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல்.
இ. தலைச்சிறந்த பணிகளை ஆற்றிய இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை எதிர்கால தலைமைக்கு உருவாக்குதல் போன்றவையாகும். விண்ணப்பிக்க தகுதியான நிபந்தனைகள் : விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் ஃ பெண்கள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு இருத்தல் வேண்டும்.
நிதியாண்டின் துவக்க நாளான ஏப்ரல் 1, 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31, 2024 (31.03.2024) அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருத்தல் வேண்டும். விருதிற்கு விண்ணப்பிப்பதற்கு,
முன்னர் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்திருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்படல் வேண்டும்). விருதிற்கு முந்தைய நிதி ஆண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட தொண்டுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் சமுதாயம் ஃ சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய ஃ மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஃ பல்கலைக்கழகங்கள் ஃ கல்லூரிகள் ஃ பள்ளிகளில் பணிபுரிவோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதி கிடையாது. சமூக தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவராகவும், தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருப்பது முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதின் தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in–ல் விண்ணப்பிக்க 31.05.2024 அன்று மாலை 4.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் மூன்று நகல்களில் 31.05.2024 மாலை 4.00மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கம். நாகப்பட்டினம்- 611003 எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்திடவும் வேண்டும். மேற்படி பயன்களைக் கருத்தில் கொண்டு,
சமூக நலனுக்காக தொண்டு புரிந்த, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு“ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.