மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க பணிகள் - வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க பணிகள் - வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

ஆய்வு 

ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க பணிகளை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழகம் முழுவதும் டிசம்பர் 17,18-ல் சென்னை மற்றும் கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டிசம்பர் 18ந் தேதி தொடங்க உள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான இடங்களை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். மேலும் இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பொது மக்கள், சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, வர்த்தக உரிமம்,பிறப்பு இறப்பு சான்றிதழ், பெயர் திருத்தம், திடக்கழிவு மேலாண்மை, தெருவோர வியாபாரிகள் நலத் திட்டம் உள்ளிட்ட சேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கலாம். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது வருகின்ற டிசம்பர் 18 முதல் ஜனவரி 2ம் தேதி வரை நடை பெற உள்ளது இந்த ஆய்வில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, நகராட்சி ஆணையர் குமரன்,வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி பொறியாளர் வருவாய் துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.'

Tags

Next Story