மக்களுடன் முதல்வர் திட்டம் - பட்டுக்கோட்டையில் டிச.18 இல் துவக்கம்

மக்களுடன் முதல்வர் திட்டம் - பட்டுக்கோட்டையில் டிச.18 இல் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம்

பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் படி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித்தீர்வு காணும் முகாம் டிச.18 திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தின் மூலம் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனடித் தீர்வு காண வழிவகை செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக் குட்பட்ட 1 முதல் 33 ஆவது வார்டுப் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காண டிச.18 முதல் மக்களுடன் முதல்வர் முகாம் பின்வரும் தேதிகளில் குறிப்பிட்டுள்ள இடங்களில் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகி றது. இதில், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 18 ஆம் தேதி 1 முதல் 6 ஆவது வார்டுப் பகுதி பொதுமக்களுக்கு திரிஸ்டார் திருமண மண்டபம், 19 ஆம்தேதி 7 முதல் 12 வார்டுப் பகுதி பொதுமக்களுக்கு ரோஜா மஹால், 21 ஆம் தேதி 13 முதல் 18 வார்டுகளுக்கு ஜிஎன்பி திருமண மண்டபம், 22 ஆம்தேதி 19 முதல் 23 வரை உள்ள வார்டுகளுக்கு பிஆர்டி திருமண மண்டபம், 27 ஆம் தேதி 24 முதல் 28 வரை உள்ள வார்டுக ளுக்கு குட்டாள் திருமண மண்டபம், 28 ஆம்தேதி 29 முதல் 33 வரை உள்ள வார்டுகளுக்கு கோமள விலாஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story