”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

ராசிபுரத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் தலைமையில், ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் 39 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் தாட்கோ உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு சேவைகளுக்கு பொதுமக்களால் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக புதிய மின் இணைப்பு, மின்கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், வருவாய்த்துறையினர் மூலமாக பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு, நில அளவீடு (அத்துகாண்பித்தல்), வாரிசுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / வருமானச்சான்றிதழ் / இருப்பிடச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், முதியோர் தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, அவர்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி வார்டு எண்:8,9,14,16,21,22,23 உள்ளிட்ட பகுதிகளுக்கு திருமதி பூவாய்அம்மாள் திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டனர், இம்முகாம்களில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் , நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், நகராட்சி நிர்வாகிகள், பணியாளர்கள், மற்றும் ராசிபுரம் நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story