சேந்தமங்கலத்தில் ”மக்களுடன் முதல்வர்”திட்ட முகாம்
சேந்தமங்கலத்தில் ”மக்களுடன் முதல்வர்”திட்ட முகாம் - ஆட்சியர் ச.உமா – பொன்னுசாமி எம்.எல்.ஏ பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18.12.2023 அன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி நாமக்கல் நகராட்சி வார்டு பகுதிகளுக்கு திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள சுப்புலட்சுமி மஹாலிலும், பள்ளிபாளையம் வார்டு பகுதிகளுக்கு கண்டிபுதூர் நகராட்சி ஆரம்ப பள்ளியிலும், பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும், சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வசந்தா மஹாலிலும், ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வசந்தா மஹாலில் நடைபெற்று வரும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், தனபால் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.