ராஜபாளையத்தில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்
குழந்தைகளுக்கு மோதிரம் அனிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவமனை மற்றும் இராஜபாளையம் பி எஸ் ஆர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளி களுக்கு ஆப்பிள் பழம் ஹார்லிக்ஸ் போன்ற பொருட்களை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் குராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷாயம் நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி. மணிகண்ட ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story