சிவகாசியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்: மேயர் பங்கேற்பு

சிவகாசியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்: மேயர் பங்கேற்பு
சிவகாசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா.மேயர் பங்கேற்பு...
சிவகாசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழாவில் மேயர் பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்களில் திமுக கட்சி கொடியை மேயர் ஏற்றி வைத்தார்.

மேலும், நகரின் பல இடங்களில் பொது மக்களுக்கு திமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கினர். மேயர் சங்கீதா இன்பம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.

சிவகாசி நகரில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாநகர செயலாளர் உதயசூரியன், பகுதி செயலாளர் காளிராஜன் உட்பட திமுக கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story