குமாரபாளையத்தில் முதல்வர் பிறந்ததின கொடியேற்ற விழா

குமாரபாளையத்தில் முதல்வர்  பிறந்ததின கொடியேற்ற விழா

அன்னதானம் வழங்கல்

குமாரபாளையத்தில் முதல்வர் பிறந்ததின கொடியேற்ற விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகர திமுக சார்பில் நகர கழக பொறுப்பாளர் ஜி.எஸ்.ஞானசேகரன் தலைமையிலும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார்,கே.ஏ.இரவி.குட்லக் சீ.செல்வகுமார் ஆர்.தர்மராஜன் மற்றும் நகர இளைஞரணி மாணவரணியினர்கள் ஆகியோர்கள் முன்னிலையிலும் 14 வட்டங்களில் கிளை கழக செயலாளர்கள் ஏற்பாட்டில் கழக மூத்த முன்னோடிகளை வைத்து இருவண்ணகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

28 வட்ட கிளை கழகத்தில் நாராயணநகர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மதியம் வட்டமலை அன்னை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற 40 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கி கௌரவிக்கப்பட்டது

Tags

Next Story