பெரும்பள்ளம் பகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா

பெரும்பள்ளம் பகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா

ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம்,பெரும்பள்ளம் பகுதியில் முதல்வரின் பிறந்தநாளை திமுகவினர் விமர்சையாக கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பெரும்பள்ளம் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பிரதிநிதி ஜெ.ஜெ. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஸ்வநாதன் தொண்டரனி ராம் ரவி பெரும்பள்ளம் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story