திருப்பூரில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா - ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு

திருப்பூரில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா - ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் அறுசுவை உணவு வழங்கினார்
திருப்பூர், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாநகரம் 16-வது வார்டில் மதிவாணன் ஏற்பாட்டில் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஆர். முத்துக்குமார்,வடக்கு மாநகர பிரதிநிதி ராமகிருஷ்ணன், வடக்கு மாநகர பிரதிநிதி வைரவேல்,வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்திபன்,16வது வட்ட கழக நிர்வாகிகள் அன்பு, முருகேஷ்,15வது வட்ட செயலாளர் குட்டிகுமார்,15வது வட்ட இளைஞரணி அமைப்பாளர் நரசிம்மன், கட்டுமான சங்க பொருளாளர் சங்கரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story