முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் - கோவி.செழியன் பங்கேற்பு

X
திமுக பொதுக்கூட்டம்
ஒசூரில் நடந்த எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற அரசு கொறடா கோவி.செழியன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் 2, 3, மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் "எல்லோருக்கும் எல்லாம்" என்கிற தலைப்பில் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர திமுக சார்பில் ராம்நகரில் நடந்து வரும் பொதுக்கூட்டத்திற்கு ஒசூர் மாநகர மேயர் சத்யா தலைமை வகித்தார்.. மாநகர துணை செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்று பேசிய கூட்டத்தில் தமிழக சட்டமன்ற அரசு கொறடா கோவி.செழியன் பங்கேற்று உறையாற்றினார்.. ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்
Next Story
