அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் !
காலை உணவு திட்டம்
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி மாணவ மாணவியர்களுடன் ஆட்சியர் மற்றும் MLA உணவு அருந்தினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி மாணவ மாணவியர்களுடன் உணவு அருந்திய ஆட்சியர் மற்றும் MLA தமிழ்நாடு முதலமைச்சர், தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், கரும்பூர் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA திட்டத்தை தொடங்கி வைத்து மாணாக்கர்களுடன் உணவு உட்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாதனூர் ஒன்றிய குழுத்தலைவர் சுரேஷ்குமார், மாதனூர் ஒன்றிய குழுத் து.தலைவர் சாந்திசீனிவாசன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
Next Story