எடப்பாடியில் மக்களுடன் முதல்வர் முகாம்

எடப்பாடியில் மக்களுடன் முதல்வர் முகாம்

மனு வழங்கல்

எடப்பாடி நகராட்சியில் நகர மன்ற தலைவர் பாஷா உத்தரவுகளை வணங்கினார்.

எடப்பாடி நகராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய தீர்வு காணப்பட்டு அதற்கான உத்தரவு சம்மந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது .... தமிழக முதலமைச்சரால் கடந்த டிசம்பர் மாதம் மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிகளிலுள்ள 30 வார்டுகளிலும் 4 நாட்களாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைப்பெற்றது. அதில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 92 மனுக்களும் முதல்வரின் முகவரியில் 95 மனுக்களும் என மொத்தம் 187 மனுக்கள் பெறப்பட்டது. இதில் குடிநீர் வசதி, காலி மனை வரிவிதிப்பு, வீட்டு வரி விதிப்பு, பெயர் மாற்றம் என பல்வேறு கோரிக்கைகள் வைத்து கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 100% தீர்வு காணப்பட்டு அனைவருக்கும் அதற்கான உத்தரவை எடப்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் பாஷா வழங்கி சிறப்பித்தார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா உட்பட நகராசி அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர் ...

Tags

Next Story