பயண சீட்டில் முதல்வர் படம்

பயண சீட்டில் முதல்வர் படம்

பயண சீட்டில் முதல்வர் படம்

கள்ளகுறிச்சியில் ஓவிய ஆசிரியர் பயண சீட்டில் முதல்வர் படம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு, முதல்வரின் சாதனையில், மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, "மகளிர் இலவச பேருந்து பயணச்சீட்டில்" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன் கோட்டைக்குச் சென்று கையெழுத்து இட்ட முதல் கோப்பு மகளிர்க்கு பேருந்து கட்டணம் ரத்து, சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் என்பதாகும். தனியாக மகளிர்க்கு இலவச பயணம் என்று குறிப்பிட்டு டிக்கெட்டுகளையும் அச்சடித்து வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பெண்கள் உயர்க்கல்வி பெறுவதற்கு இந்தத் திட்டம் உதவும் குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்களுக்கு மற்றும் கணவரின் வருமானம் போதவில்லை என்று குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க உதவும் என யோசித்து வேலைக்குச் செல்ல தயாராகும் பெண்களுக்கு இந்தத் திட்டம் பேரானந்தம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, முதல்வரின் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டு முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் "மகளிர் இலவச பேருந்து பயணச்சீட்டில்" மை பேனாவால் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஆறு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய், அருமையாக வரைந்துள்ளீர்கள் என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.

Tags

Next Story