முதல்வரின் தனி செயலாளர் தந்தை மறைவு

முதல்வரின் தனி செயலாளர் தந்தை மறைவு

தனிச்செயலாளர் தந்தை

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி செயலாளர் தினேஷ்குமார் தந்தை இயற்கை எய்தினார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் அவர் நேற்று 12.05.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார். அவருக்கு ஆர்.சுமதி என்ற மனைவியும், மகன் ஆர்.தினேஷ்குமார், முதல்வரின் தனிச் செயலாளராக உள்ளார். மருமகள் ஆர்.ஐஸ்வர்யா,மகள் ஆர்.திவ்யா, மருமகன் பி.செல்வகுமார் ஆகியோர் உள்ளனர்

T.V.ரவி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீடு திரும்பிய அவர் இயற்கை எய்தினார்.மறைந்த T.V.ரவி அவர்கள் மறைவுக்கு முதலமைச்சரின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,

செ.முத்துசாமி, பொன்முடி, மா.சுப்பிரமணியம், எ‌.வ.வேலு, மூர்த்தி, சி.வி.கணேசன், செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, பெரிய கருப்பன், மூர்த்தி, மா.மதிவேந்தன், எம்.ஆர் கே. பன்னீர்செல்வம், மனோ தங்கராஜ், மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நாசர், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுர செந்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா.

சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், சேலம் ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அண்ணாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இன்று திங்கட்கிழமை மாலையில் ராசிபுரம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

(குறிப்பு) நாளை (மே-14)செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள தினேஷ்குமார் இல்லத்திற்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story