திருச்செங்கோட்டில், மக்களுடன் முதல்வர் திட்ட கலந்தாய்வு கூட்டம்

திருச்செங்கோட்டில், மக்களுடன் முதல்வர் திட்ட கலந்தாய்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்டம். வரும் 18ம் தேதி துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம். நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலை மையில் நேற்று நடந்தது. ஆணையாளர் சேகர் திட்டம் குறித்து விளக்கினார். இதில் நகராட்சி பொறியாளர் சரவணன் சுகாதார அதிகாரி வெங்கடாஜலம் மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பட்டா மாறுதல், பட்டா கோரு தல் மாற்றுத்திறனாளி களுக்கான நலத்திட்ட உத விகள், வீட்டு வரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி செலுத்துவதில் குறைகள் இருந்தால் சரி செய்யவும். இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், எரிசக்தி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் கோரி மனு செய்தால் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். நகர்மன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களின் தனிப்பட்ட குறையை தெரியப்படுத்தி, நிவர்த்தி செய்து கொள் ளலாம் என்று எடுத்துக் கூறப்பட்டது.

Tags

Next Story