முதல்வர் வருகை - ஏற்பாடுகளை துரைமுருகன் ஆய்வு!
துரைமுருகன் ஆய்வு
திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் வேலூர் வருவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
Next Story