குழந்தை கடத்தல் வதந்தி; போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை

குழந்தை கடத்தல் வதந்தி; போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை
குமரி போலீஸ் எஸ் பி சுந்தர வதனம்
கன்னியாகுமரியில் குழந்தை கடத்தல் வீணாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொல்லங்கோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நீரோடி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் குழந்தை கடத்தலில் தொடர்புடையவர் என அந்தப் பகுதியில் உள்ள சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதேபோன்று வள்ள விளை ப்பகுதியில் 45 மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் குழந்தை கடத்தலில் தொடர்புடையவர் எனவும் வீடியோ பரவியது. மேலும் ததேயு புரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரின் வீடியோ காட்சிகளை பரப்பி குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.

அதனுடன் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த வீடியோ பதிவுகளும் தற்போது நடந்தது போன்று பரப்பப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுடைய ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பரப்பப்படும் குழந்தை கடத்தல் தொடர்பான செய்திகள் உண்மைக்கு புறம்பான வதந்தியாகும். இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 100 என்று எண்ணை அழைக்கவும். அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இது போன்ற வதந்தி பரப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story