தசைநார் செயலிழப்பால் குழந்தை பாதிப்பு - சிகிச்சைக்கு உதவ கோரிக்கை

தசைநார் செயலிழப்பால் குழந்தை பாதிப்பு - சிகிச்சைக்கு உதவ கோரிக்கை

மனு அளிக்க வந்த தந்தை 

பெரம்பலூர் மாவட்டத்தில் தசைநார் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.16 கோடியை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குழநதையின் தந்தை மனு அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் இவரது மனைவி கனிமொழி இவர்களுக்கு ஸ்ரீனிகா என்ற ஒரு வருடம் பத்து மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது, குழந்தைக்கு தசைநார் செயலிழப்பு எனும் அரிய வகை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது, இதனால் அக்குழந்தையால் எழுந்து நிற்கவும் நடக்கும் இயலாத நிலையில் உள்ளது,

ஆகவே இதற்காக குழந்தைக்கு இரண்டு வயது முடிவடையும் முன்பு இதற்கான சிகிச்சைக்கு, ஜோல்ஜென்ஸ்மா (zolgensma) என்ற மருந்தினை செலுத்த மருத்துவர் பரிந்துரைத்து உள்ளனர், ஆனால் இந்த மருந்து இந்தியாவில் இல்லை அமெரிக்காவில் மட்டும்தான் உள்ளது இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 16 கோடி ஆகும் என தெரிவித்ததால் சாதாரண தனி தனி மனிதனான என்னால் இத்தொகை, ஏற்பாடு செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது, அதனால் குழந்தைகள் உயிரை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுத்து மருத்துவத்திற்கான, நிதி உதவி தமிழக அரசும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்வதாக,ஜூன் 18ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மனு கொடுக்கும் போது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் உடன் இருந்தனர் என்பதும், மேலும் குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்ட உதவி கேட்டு பல்வேறு முயற்சிகளில் எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story