விருதுநகர் மாவட்டத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்: மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்: மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் 

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan), பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned),

பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered) மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்துவள ஆதார மையத்தின் www.cara.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.

அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents) என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பின்கண்ட சான்றுகளான 1. பிறப்புச்சான்று, 2. ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேசன் கார்டு, 3.பான்கார்டு, 4.திருமண பதிவுச்சான்று, 5.மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச்சான்று, 6.தம்பதியரின் புகைப்படம், 7.குடும்ப ஆண்டு வருமானச்சான்று,

8.அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, 9.நண்பர்/உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும், விபரங்களுக்கு “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2ஃ830-5, வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு,

விருதுநகர் - 626003, தொலைபேசி எண். 04562 293946 அல்லது அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சிறப்பு தத்தெடுப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story