சரக்கு வாகனம் ஏறி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சரக்கு வாகனம்  ஏறி ஒன்றரை வயது குழந்தை  உயிரிழப்பு

குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம்,குஞ்சாரபள்ளி பகுதியில் சரக்குவாகனம் மோதி ஒன்ரறை வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த குஞ்சாரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவருக்க ஒன்றரை வயதில் திருமுருகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டின் முன்பு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் தனது சரக்கு வாகனத்தை பின்பக்கமாக எடுத்துள்ளார்.

அந்த பகுதியில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது தெரியாததால் சரக்கு வாகனத்தின் சக்கரம் குழந்தை மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை புதைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த விஏஓ பிரபு, மாரண்டஅள்ளி போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில், மருத்துவர்கள் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story