தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
குழந்தை பலி
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ,அதியமான் கோட்டை இளங்காட்டு கொட்டாயைச் சேர்ந்தவர் மாது இவரறுக்கு 4 வயது மற்றும் ஒன்றரை வயதில் என 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மாது, மனைவி மற்றும் குழந்தைகளுடன், பூதன அள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அங்குள்ள தோட்டத்தில் அனைவரும் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாதுவின் ஒன்றரை வயது மகளான தேவதர்ஷினி திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தேடிய போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்திருப்பது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்து பார்த்த போது, குழந்தையை ஏற்கனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.