மரியா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் குழந்தை நோய் எதிர்ப்பு முகாம்

மரியா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் குழந்தை நோய் எதிர்ப்பு முகாம்
குழந்தைகளுக்கு துளி மருத்துவம்
மரியா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் குழந்தை நோய் எதிர்ப்பு முகாம் நடைபெற்றது.

குமரி மாவட்டம் ஆற்றூர் மரியா ஆயுர் வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவித்தல் (சுவர்ணபிராசனா) முகாம் நடந்தது. முகாமுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணை தாளாளர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை வகித்தனர் .

முதல்வர் டாக்டர் சியாமளா தேவி வரவேற்றார். இயக்குநரும் மருத்துவ கண்காணிப்பாளருமான டாக்டர் டி.விஜயராகவன் சிறப்புரையாற்றினார். திருவட்டார் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் ஜே. சந்தோஷ் குழந்தைகளுக்கு தங்க துளி மருந்துகள் வழங்கி முகாமை துவங்கி வைத்தார்.

பூசம் நட்சத்தித்திர நாளான நேற்று சிறு குழந்தைகள் முதல் 16. வயதுடையவர்களுக்கு இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. தாளாளர் டாக்டர் ஜி. ரசல்ராஜ் பேசும் போது, "ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர நாளில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, பசியின்மையை போக்க, கோபத்தை கட்டுப் படுத்த, கவனக்குறைவை தடுக்க, 100 சத பக்க விளைவுகள் இல்லாத இந்த தங்க துளிகள் வழங்கப்படும்." என்றார்.

ஏற்பாடுகளை மரியா ஆயுர்வேத கல்லூரி குழந்தை மருத்துவ பிரிவு மருத்துவர் டாக்டர் சுஜன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உதவி பேராசிரியை டாக்டர் லிஞ்சு ஷா நன்றி கூறினார்

Tags

Next Story