குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி
செய்யூர் அருகே கடப்பாக்கத்தில் நடந்த குழந்தை திருமணமில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கடப்பாக்கத்தில் , குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், குழந்தைகள் மீதான உரிமைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்போம் என்ற வாசகம் அடங்கிய கை பதாகைகளுடன் கடப்பாக்கம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.
Next Story