குழந்தை திருமணம் மிகவும் ஆபத்தானது: நீதிபதி பேச்சு

குழந்தை திருமணம் மிகவும் ஆபத்தானது: நீதிபதி பேச்சு

 விழிப்புணர்வு முகாம்

செஞ்சி விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு வந்த அனைவரையும் திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செஞ்சி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இளவரசி, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளித் துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பூர்ணிமா பேசியதாவது:- மாணவிகள் சமூகத்தில் எந்தவித இடையூறும் இன்றி முன்னேறுவதற்கு இந்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. கவலை இல்லாத வாழ்க்கை பள்ளிப்பருவம் என்று நாம் நினைப்போம். ஆனால் பாலியல் என்று வரும்போது மன நிலையில் தடுமாற்றம் ஏற்படும். எத்தனை சட்டங்கள் வந்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. தவறான நடத்தையால் குழந்தைகள் மனதில் காயத்தை ஏற்படுத்துகிறார்கள். நிறைய பேருக்கு இவ்வாறு ஏற்பட்டிருக்கும். அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. சொல்ல முடியாத சூழ்நிலை ஆகிவிடுகிறது. அவைகள் பதிவா காத குற்றங்களாக இருக்கின்றன. பெற்றோர்களும் குழந்தைகளை படிக்க வைத் தோமா, திருமணம் செய்து கொடுத்தோமா என்ற மனநிலையில் உள்ளதால் குழந்தை திருமணம் ஏராளமாக நடைபெறுகிறது. குழந்தை திருமணம் என்பது மிகவும் ஆபத்தானது. ஆகவே குழந்தை திருமணம் தடை செய்யப்பட வேண்டும். மேலும் நிறைய குழந்தைகளை செங்கல் சூளை, பட்டாசு தொழிற்சாலை, வீட்டு வேலை, ஆடை தயாரிப்பு போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகிறார்கள். அங்கு பாலியல் சீன்டல்கள் அதிகமாக நடக்கின்றன. அதற்காகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. பாலியல் செய்தல் என்பதை நன்றாக புரிந்து கொண்டு அது குறித்து யாராவது அவ்வாறு நடந்தால் உங்களுடைய பெற்றோர்களிடமோ பெற்றோருக்கு இணையாக உள்ள ஆசிரியையிடமோ தெரிவிக்க வேண்டும். அல்லது 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப் பட்ட குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப் படும். எனவே பாலியல் சட்டங்கள் குறித்து நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் தற்போது எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. எனவே நீங்கள் அனைவரும் நன்றாக படித்து அனைத்து துறைகளிலும் அதிகாரிகளாக வர வேண்டும். இவ்வாறு நீதிபதி பூர்ணிமா பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குற்றவியல் நீதிபதி மனோகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story