குழந்தை திருமணம் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
குழந்தை திருமணம் விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக ஊராட்சியில் உள்ள சிறு கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள், குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பாக கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி ஆகிய வட்டாரங்களில் குழந்தை திருமணம் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குழந்தை திருமணம் மற்றும் இள வயது கர்ப்பத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தினால் தாய்-சேய்க்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்,மனநல பிரச்சனைகள், ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளி இடைநின்ற குழந்தைகளை ஊக்குவித்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல், சமூக வலைத்தளம் மூலம் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தடைச்சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாம்களில் மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு உட்பட மாவட்ட கல்வி அலுவலர், ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story