குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தல் !

குழந்தைகள் பாதுகாப்பு குழு  ஆய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தல் !
ஆய்வுக்கூட்டம் 
குழந்தைகள் பாதுகாப்பு குழு துவக்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்துமாறு, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு துவக்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்துமாறு, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து, பேரூராட்சித் தலைவரை தலைவராகவும், செயல் அலுவலரை செயலராகவும், வார்டு உறுப்பினர்கள் மூன்று பேர், கிராம நிர்வாக அலுவலர், அரசுப் பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரதிநிதி, காவல் நிலைய பிரதிநிதி உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் முதல் கலந்தாலோசனை கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

Tags

Next Story