திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவம் -ரத்தப்போக்கால் பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவம் -ரத்தப்போக்கால் பெண் உயிரிழப்பு

ஹேமலதா 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ரமேஷ் (28) ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மகள் ஹேமலதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் சுகப்பிரசவத்தின் காரணமாக இரண்டு வயதில் மெய்யழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமலதா இன்று காலை வயிற்று வலி அதிகமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார் அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பிரசவ வலி மேலும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி விடுங்கள் என கூறியுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளனர். மேலும் பெண் வீட்டார் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர்களிடம் அருகிலுள்ள கொரட்டி மருத்துவமனைக்கு செல்லாமல் முதல் பிரசவம் ஆன குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடந்தது எனவே அங்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க கூறியும் கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே பிரசவம் ஆகி அதிக ரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story