மூதாட்டி உடலை அடக்கம் செய்ய பிள்ளைகள் எதிர்ப்பு

மூதாட்டி உடலை அடக்கம் செய்ய பிள்ளைகள் எதிர்ப்பு
மூதாட்டியை பொதுமக்கள் அடக்கம் செய்தனர்
அருமனையில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய பிள்ளைகள் எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு பகுதி சேர்ந்தவர் பொன்னுமணி மனைவி எமிலி (85). இவர்களுக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னுமணி இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு எமிலி தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்திருந்தார். சொத்து பிரச்சனையில் பிள்ளைகள் அனைவரும் அவரை கைவிட்டனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு ஊர் மக்களும் போலீசாரும் மீட்டு நித்திரவிளையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மூதாட்டியை சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் முதியோர் இல்லத்தில் எமிலி இறந்தார். அதைத்தொடர்ந்து முழுக்கோடு ஊராட்சி தலைவர் தலைமையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்ததும் மூதாட்டியின் ஒரு மகனின் மனைவி மட்டும், எமலியின் உடலை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்றும், இந்த இடம் தங்களது பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் எமலியின் உடலை அவரது கணவர் பொன்னுமணியை அடக்கம் செய்த அதே இடத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் முடியும் வரை அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் யாரும் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

Tags

Next Story