சுட்டெரிக்கும் வெயிலில் ஆப்பாயில் போட்டு சிறுவர்கள் சேட்டை
எடப்பாடியில் சுட்டெரிக்கும் அனல் வெயிலில் சிறுவர்கள் ஆப்பாயில் போட்டு விளையாடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் சுட்டெரிக்கும் அனல் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. மக்களின் அவதி ஒருபுறம் இருக்க, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, உள்ளிட்ட பயிர் வகைகள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வருகிறது. விவசாய வயல்களில் உழவு செய்யப்பட்ட மண் மற்றும் தார் சாலை, வீட்டில் நிலப்பரப்பு என்று எங்கு பார்த்தாலும் அனலாய் கொதிக்கிறது.
இதற்கும் மேலாக, குடிநீர் தொட்டி தண்ணீர் எப்போதும் வெந்நீராக தான் உள்ளது. சிறுவர்களின் சேட்டை இவ்வாறு கோடை வெயிலில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள சிறுவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை தங்களுக்கு சாதகமாக மாத்தி யோசித்து சேட்டையில் ஈடுபட தொடங்கி உள்ளனர். தேவூர் பகுதியில் உள்ள சிறுவர்கள், வெயில் சூட்டில் தண்ணீர் வைத்து டீ போட்டு குடிப்பதும், வீட்டின் மொட்டை மாடியில் ஆப்பாயில் போடுவதும், வாசலில் தோசை கல்லை வைத்து ஆம்லெட் போடுவதுமாக பல்வேறு சேட்டைகளை செய்து வருகின்றனர். வீட்டுக்குள் முடங்கினாலும் சிறுவர்களின் இதுபோன்ற சேட்டைகளை வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் ரசிக்க தான் செய்கின்றனர்.