சீத்தாமூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மின்வசதி இல்லாததால் குழந்தைகள் அவதி

சீத்தாமூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மின்வசதி இல்லாததால் குழந்தைகள் அவதி
அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் அவதி
சீத்தாமூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

சித்தாமூர் அருகே பருக்கல் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு பருக்கல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில் மின்கம்பிகள் பழுதடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பழுதடைந்த மின்கம்பிகள், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், மின்சார வசதி இல்லாமல் பகல் வேளையில் வெயிலின் தாக்கம் காரணமாக, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். எ

னவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story