நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் !!

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 14.11.2024 வியாழக்கிழமை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும், பொருளாளர் கா. தேனருவி அவர்களும் தலைமையேற்று விழாவை நடத்தினார்கள். பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் பேசுகையில், ஒவ்வொரு தினங்களையும் கொண்டாடும் போது அந்த தினங்களுடைய வரலாறு, அந்த தினங்களின் நன்மைகள் ஆகியவற்றை குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல் கலாச்சாரம், பண்பாடு, நல்ல பழக்க வழக்கங்களும் முக்கியம் அந்த வகையில் குழந்தைகள் தினம் கொண்டாடுவது குழந்தைகளின் மனநிலையை வளப்படுத்துவதற்கே என்று கூறினார்.” குழந்தைச்செல்வங்களை மகிழ்விப்பதற்காக ஆசிரியர்கள் நடனம், நாடகம், பாட்டு என கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பள்ளி குழந்தைச் செல்வங்கள் அனைவரும் வண்ண ஆடைகளில் மகிழ்வுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் முதல்வர் ஆண்டனிராஜ் அவர்கள் குழந்தைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களையும், கலைநகழ்ச்சிகளால் குழந்தைகளை மகிழ்வித்த இருபால் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story