அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் !!
Children's Day Celebration in Govt School
ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் கவிதா அவர்கள் வரவேற்பு உரையாற்ற, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தைகளால் நேரு மாமா என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்கலால் நேரு அவர்களின் பிறந்தநாளை பற்றி விளக்கிக் கூறி சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி ஆசிரியர் மா.பாஸ்கரன் அவர்கள் நன்றி உரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
Next Story