ஈரோடு மாநகராட்சியில் குழந்தைகள் இல்லங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் குழந்தைகள் இல்லங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலம் செயல்பட்டு வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம். அரிசி பவன் குழந்தைகள் இல்லம், ஹெல்பிங் ஹார்ட்ஸ் குழந்தைகள் இல்லம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தத்து வளமையம் ஆகிய குழந்தைகள் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும். இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள். சமையலறைகள், குழந்தைகள் தங்கியுள்ள அறைகள், கழிப்பறைகள், சுற்றுபுறத்தூய்மை போன்றவைகளை பார்வையிட்டார். மேலும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் தங்கி உள்ள குழந்தைகளின் விவரங்களை கேட்டறிந்தார். ஹெல்பிங் ஹார்ட்ஸ் தத்து வளமையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் விவரம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் மருத்துவ பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், குழந்தைகளின் இல்லங்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளதா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story