மருத்துவக்கல்லூரியில் பச்சிளங்குழந்தைகள் வாரவிழா நிறைவு
பச்சிளங்குழந்தைகள் வாரவிழா நிறைவு
தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா நவம்பர் 15 முதல் 21ம் தேதி வரை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மருத்துவ மையங்களும் சமூகமும் இணைந்து பச்சிளங் குழந்தைகளை பேணிப் பாதுகாத்தல் என்ற மையக் கருத்தினை கொண்டு கர்ப்பிணிகளுக்கும் பேறுகாலமடைந்த தாய்மார்களுக்கும் குழந்தை நலம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கிராம சுகாதார செவிலியர்க்கும், பச்சிளங் குழந்தைகளுக்கான தொடர் பராமிப்பு மற்றும் சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சத்யபாமா தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் குமரவேல்,
துணை முதல்வர் மருத்துவர் விசாலாக்சி, RMO மருத்துவர் மகேந்திரன், ARMO மருத்துவர் தென்றல், குழந்தைகள் துறைத்தலைவர் மருத்துவர் சிவகுமார், மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் இந்திராணி, இணை பேராசிரியர்கள் மருத்துவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர் வனிதா, உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய பச்சிளங் குழந்தை வார்டு செவிலியர்க்கு நற்சான்றிதழும் குழந்தை நலனை சிறப்பாக வழங்கிய தாய்மார்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.