வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் காயம்
திருப்பத்தூர் அடுத்த அகரத்தில் வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து 2குழந்தைகள் உட்பட 3 பேர் காயம்! திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!போலிசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரும் அவரது மனைவி லட்சுமி (35) இவருக்கு மெய்யரசன் (11), தினேஷ் (2), திவாகர் (2) இரட்டை குழந்தைகள் என 5 பேர் உள்ள நிலையில் அவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாத காரணத்தினால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் கட்டப்பட்ட அவர்களது உறவினர் வீட்டில் (குருப் அவுஸ்) வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக கான்கிரீட் கூரை ஈரப்பதத்துடன் இருந்த நிலையில் வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மேற்கூரை திடீர் என்று சரிந்து விழுந்ததில் லட்சுமி மற்றும் அவர்களது 3 குழந்தைகளுக்கும் தலை, கை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.