பட்டடையான் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு

பட்டடையான் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல்  பாதிப்பு
பாபநாசம் பகுதியில் பட்டடையான் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் கடும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பகுதியில் மிளகாய் சாகுபடி அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. அதுபோல் இங்கு அறுவடை செய்யப்பட்ட மிளகாய்களை தஞ்சை, திருவையாறு மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் பாபநாசம் படுகை புது தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மிளகாய் செடிகளில் ஒருவித பட்டடையான் எனும் வேர் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதால் மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பூச்சி தாக்குதலால் செடிகள் வெள்ளை நிறமாக காட்சியளிப்பதுடன் வேர்கள் முற்றிலும் சேதமடைந்து மிளகாய் நிறமும் மாறிய நிலையில் காய்த்து வருகின்றன. மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து மிளகாய் மார்க்கெட்டுக்கு வருவதால் இங்கு விளையும் மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை இதனால் பாபநாசம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags

Next Story