சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், பெரிய காருகுடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் தி வலிவலம் ஊராட்சி பெரிய காருகுடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று 9ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ஆம் தேதி அனுக்ஞை விநாயகர் பூஜை முதல் கால பூஜையுடன் துவங்கியது.

கும்பாபிஷேக நாளான வெள்ளிக்கிழமை இரண்டாம் காலை யாகபூஜை நிறைவு பெற்று பின்னர் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது பின்னர் மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது . முன்னதாக பரிவார தெய்வமான காத்தவராயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாகை சின்மயா மிஷன் சுவாமி ராமகிருஷ்ணானந்தா தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் வலிவலம் ஊராட்சி தலைவர் செ.மணிகண்டன், கிராமவாசிகள் திருப்பணிக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story