சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்ன தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு, பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ, க. பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பசாமி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 24 மாணவர்களுக்கு தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ.

Tags

Next Story