வரகூர் அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணகலா புஷ்பகலை சமேத ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு திருவிழா கடந்த ஏப்ரல் - 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது, தொடர்ந்து மே - 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் மே 12ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றதை தொடர்ந்து, விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது, சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர், இதில் வரகூர் கிராமம் மட்டுமல்லாமல் அருகே உள்ள அந்தூர் ,அசூர், பரவாய், கொளப்பாடி, வெண்மணி, குன்னம் என அருகே உள்ள கிராம பொது மக்கள் ,பக்தர்கள் என பலர் திருத்தேரை வடம்படித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.