சிவகாசியில் சித்திரை திருவிழா நாளையுடன் நிறைவு

சிவகாசியில் சித்திரை திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது.
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா, நாளை நிறைவு..... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா, கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற சித்திரை திருவிழாவில், ஸ்ரீபத்திரகாளியம்மன் தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாவான,சித்திரை திருவிழா தேரோட்டம் கடந்த 10ம் தேதி (வெள்ளி கிழமை) மாலை தொடங்கியது.கடந்த 4 நாட்களாக தேரோட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் மாலை கலந்து கொண்டு வடம் பிடித்து தேரிழுத்த ஸ்ரீபத்திரகாளியம்மன் எழுந்தருளிய பெரிய தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து,தேரில் எழுந்தருளியிருந்த ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து, ஸ்ரீபத்திரகாளியம்மன் 'அன்னம்' வாகனத்தில் எழுந்தருளி தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டத்துடன் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின் முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story